ரூ.9 கோடியை தர மறுக்கிறார்: விஷால் மீது ராதிகா புகார்
வெடி பட விநியோகம் தொடர்பாக ரூ. 9 கோடியை தர மறுக்கிறார் என தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் நடிகர் விஷால் மீது நடிகை ராதிகா புகார் கூறியுள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் விஷால் நடித்த வெடி படத்தை விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரித்தார். இந்த படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இந்த படத்தை விநியோகம் செய்யும் பொறுப்பை நடிகை ராதிகாவின் ராடான் நிறுவனம் ஏற்றிருந்தது. இதற்காக ரூ. 12 கோடி ராதிகாவுக்கு தருவதாக விஷால் தரலப்பில் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த தொகையில் ரூ. 9 கோடியை தற்போது தர மறுப்பதாக நடிகை ராதிகா விஷால் மீது குற்றம் சாட்டியுள்ளார்.