You are here:

ஒசாமா குறித்த தகவல்களை மறைத்த பாகிஸ்தான்: விக்கிலீக்ஸ் பரபரப்பு

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 25558
குறைந்தஅதி சிறந்த 

Share this Article

ஒசாமா பின்லாடனின் மறைவிடம் குறித்து பாகிஸ்தானிற்கு ஏற்கனவே தெரிந்து இருந்தபோதிலும், அதனை பாகிஸ்தான் வெளிக்காட்டவி‌ல்லை என்றும், இதன்மூலம், பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களுக்கு துணைபோயுள்ளது உறுதியாகி உள்ளதாக விக்கிலீக்ஸ் பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ராணுவ உயர் அதிகாரிகள், பாகிஸ்தான் உயர் அதிகாரிகளுடன் இதுகுறித்து பலமுறை எடுத்துக்கூறிய போதும் பாகிஸ்தான் இதை கண்டுகொள்ளவில்லை ‌என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்லாடன் கொல்லப்பட்டதை அடுத்து, அவரைத் தங்க வைத்து ஆதரவு தந்ததாக, பாகிஸ்தான் மீது, உலக நாடுகள் சந்தேகம் எழுப்பியுள்ளன. "அபோதாபாத்தில் பின்லாடன் தங்கியிருந்தது எங்களுக்கு தெரியாது' என, பாகிஸ்தான் மறுத்தாலும், அந்த நாட்டின் நடவடிக்கைகள் மீது, பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

கடந்த 2001ம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டது முதல் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட வந்த அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன் கடந்த மே 1ம் தேதி, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் அரு‌கில் அபோதாபாத்தில் உள்ள பண்ணை வீட்டில் இருந்தபோது, அமெரிக்காவின் அதிரடி ஆபரேஷனில் கொல்லப்பட்டார். பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தெரியாமலேயே இந்த அதிரடி ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது அமெரிக்கா. இந்நிலையில் பின்லாடன் தங்கியிருந்த வீடு, பாகிஸ்தானின் ராணுவ பயிற்சி மையத்திற்கு மிக அருகில் இருக்கிறது. இவ்வளவு காலம் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தெரியாமல் பின்லாடன் எப்படி தங்கியிருக்க முடியும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் பயங்கரவாதத்தை எதிர்க்கும் நாடுகள் அனைத்தும் பாகிஸ்தான் நா‌ட்டை சந்தேகிக்கிறது. ஆனால் பாகிஸ்தான் அரசோ, பின்லாடன் இவ்வளவு காலம் இங்கு தங்கியிருந்தது தங்களுக்கு தெரியாது என்று கூறிவருகிறது. இதை நிரூபிக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறி வருகிறது. இதனிடையே பின்லாடன் குறித்த தகவல்களை பாகிஸ்தானிடம் அவ்வப்போது அமெரிக்கா விசாரித்து வந்துள்ள தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி அப்போதைய அதிபர் முஷாரப் ஒசாமா பாகிஸ்தானில் இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக கூறினார். இதனையடுத்து அமெரிக்க செனட்டர் ஜான் மெக்கைன் மற்றும் அதிபர் முஷாரப் இடையேயான அவசர கூட்டம் நடைபெற்றது. அதில் பின்லாடன் மற்றும் அய்மான் அல் ஜவாரி ஆகியோர் பாஜ்பூர் மலை பகுதியில் பதுங்கியிருப்பதாக தெரிவித்தார். இவ்வாறு அதிபர் சொன்ன ஒரு வாரத்திற்குள், பாகிஸ்தான் பிரதமர் கிலானி, பின்லாடன் மற்றும் அவரது கூட்டாளிகள் யாரும் பாகிஸ்தானில் இல்லை என்று அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறியிருந்தார்.

கடந்த பிப்ரவரி 2009ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ தளபதி கியானி, அமெரிக்கா சென்றபோது அந்நாட்டு தூதர் அனி பேட்டர்சன் சந்தித்தார். அப்போது பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ., அமைப்பு பயங்கரவாதிகளுக்கு உதவுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. இதற்கு கியானி பாகிஸ்தான் நிச்சயம் அமெரிக்காவுக்கு தேவையான உதவிகளை செய்யும் என்று வாக்குறுதி அளித்து இருந்தார். அதன்பின்னர் 2008ம் ஆண்டு ஜன.9 தேதி கியானி, ஜோசப் லிபர்மென் என்பவரை சந்தித்தார். அப்போது ஒசாமா மற்றும் அல்-ஜவாரி குறித்து விசாரித்தபோது, பின்லாடன் எங்கி தங்கியிருக்கிறார் என்று இதுவரை எங்களால் கண்டறிய முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.

அதேபோல் அதிபர் சர்தாரி அதிபராக பொறுப்பேற்ற பின்னர், அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி அதிபர் சர்தாரியை சந்தித்து பேசியுள்ளனர்.அப்போது அமெரிக்க அதிகாரிகள் ஒசாமா குறித்து இன்னும் ஒருதகவலும் தெரியவில்லை என்று பாகிஸ்தான் கூறுவது வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளனர். அதற்கு சர்தாரி ஒசாமாவிற்கு எதிரான தேடுதல் வேட்டை ஒருபோதும் தோல்வி அடையாது. நிச்சயம் நாங்கள் கண்டுபிடிப்போம். பாகிஸ்தான் அரசு ஒசாமாவிற்கோ அல்லது பயங்ரவாதத்திற்கோ எப்போதும் துணை போகாது என்று பேசியிருக்கிறார்.


ஒசாமா படம் : அமெரிக்கா விளக்கம் : ஒசாமா பின்லாடனின் படம் மிக கோரமாக இருந்ததன் காரணத்தினாலேயே அது வெளியிடப்படவில்லை என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக, அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி கூறியதாவது, ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட நிலையில், அவனது உடல் மிகவும் கோரமாக இருந்தது. இதனால்தான், அவனது போட்டோ வெளியிடப்படவில்லை. ஒசாமா மீதான் தாக்குதலில் சிறிதளவு கூட பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டின் உதவி இல்லை. இந்த தாக்குதலில் முழுமையாகவும் மற்றும் முழுமூச்சுடனும் அமெரிக்கப்படைகள் தான் செயல்பட்டது. ஒசாமா மீதான தாக்குதல் குறித்து எந்த நாட்டிடமும் மன்னிப்பு ‌கோர அமெரிக்காவிற்கு அவசியமில்லை என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தானிற்கு உதவி நிறுத்தம் சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடனை இதுவரை பாதுகாத்து வந்த பாகிஸ்தானிற்கு எவ்வித உதவியையும் அமெரிக்கா செய்யக்கூடாது என புளோரிடாவைச் சேர்ந்த பார்லிமெண்ட் எம்பிக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தங்களின் கோரிக்கை குறித்து, அரசு பரிசீலிக்கும் என்று எ‌திர்பார்க்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா மட்டுமல்லாது, பல சர்வதேச நாடுகளும், இந்த விசயத்தில் பாகிஸ்தானிற்கு நெருக்கடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அமெரிக்கா தங்களுக்குத் தெரியாமல், தங்கள் நாட்டிலேயே பின்லாடனைக் கொன்றது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான செயல் என்றும், இதனை கடுமையாக கண்டிப்பதாக பாகிஸ்‌தான் தெரிவித்துள்ளது.

Share this Article

 

Add comment


Security code
Refresh

உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 2469477