
ராவணன் படத்தை அடுத்து, மணிரத்னம் இயக்க இருக்கும் படம் பொன்னியின் செல்வன். விஜய், விக்ரம் மற்றும் மகேஷ் பாபு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்மூவரில் மகேஷ்பாபு மற்றும் விஜய் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் போர்க்கள காட்சிகள் நிறைய இடம் பெற இருக்கின்றன. மருதநாயகம் படத்துக்காக ஏற்கெனவே போர்க்கள காட்சிகள் எடுத்த அனுபவசாலியான கமலிடம் தனது படத்திற்கு அதுபோன்ற காட்சிளை படமாக்குவது குறித்து ஆலோசனை கேட்டுள்ளாராம் மணிரத்னம்.


