பார்ட்டிக்கு பெயர் போன நடிகையான அவரைப் பற்றி முன்பெல்லாம் வாரத்துக்கு நாலு செய்திவரும், ஈசிஆரில் ஆடினார் என்றெல்லாம்.

ஆனால் சமீபமாக எந்த செய்தியுமில்லை. பார்ட்டியை நடிகை நிறுத்திவிட்டாரா?
அப்படியெந்த அசம்பாவிதமும் இல்லை. நடிகை தனது மீட்டிங் பார்ட்டியை ஹைதராபாத்துக்கு மாற்றியிருக்கிறார்.
சமீபத்தில் இவர் நடித்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது.. விழாவுக்கு வந்தவர் படத்தின் நாயகனுடன் கிளம்பிச் சென்றிருக்கிறார். ரகசிய பார்ட்டிதான்.
ஆந்திராவில் இப்போது அப்படியொன்றும் பரபரப்பு செய்திகள் இல்லாததால் நடிகையின் ரகசிய பார்ட்டிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன மீடியாக்கள்.


