
அது மட்டுமல்ல ஏராளமான பாடல்களை பாடி இனிய பாடகராகவும் தமிழ்சினிமா வரலாற்றில் பதிவானவர். இதையெல்லாம் சொல்லி விளக்குவதை விட இன்னும் சிம்பிளாக விளக்கலாம். இவர் நடிகர் விஜய்யின் தாய் மாமா.
பெருமாள் கோவில் பூசாரியா இருந்தாலும் ஒரு வாய் உண்ட கட்டி தான் உத்தரவாதம் என்பது போல அவ்வளவு பெரிய நடிகருக்கு மாமாவாக இருந்தாலும், தன் குரலே தனக்குதவி என்று வாழ வைத்திருக்கிறது சூழ்நிலை. ஏனென்றால் இவரது குடும்பமும், விஜய் குடும்பமும் பேசி பழகி பல வருடங்கள் ஆகிவிட்டதாம்.
டிஸ்கவரி சேனல் இப்போது தமிழிலும் ஒளிபரப்பாகிறது. இதில் சொல்லப்படும் பல்வேறு சங்கதிகள் எஸ்.என்.சுரேந்தரின் குரலில் தான் ஒலிக்கிறது. விஜய் எங்கிருந்தாலும் நல்லாயிருக்கணும்.
ஆனால் நான் தூக்கி வளர்த்த அந்த பிள்ளை பைபாஸ் சத்திர சிகிச்சை செஞ்சு படுத்திருந்த போது கூட என்னை வந்து பார்க்கலையே என்று புலம்பினாராம் ஒரு முக்கியமான புள்ளியிடம். கேட்கவே கஷ்டமா இருக்கு.


