
என்னையும் பரபரப்பான ஹீரோயின்களான பிபாசா பாசு, ஸ்ரேயா உடன் இணைத்து ஏதேதோ வதந்திகள் உலாவந்தன.
மும்பையில் உள்ள நட்பு வட்டாரத்தோடு ஸ்ரேயாவையும் எனக்கு சில வருடங்களாக தெரியும். மும்பை வரும்போதெல்லாம் அவரை சந்தித்து பேசியுள்ளேன். ஸ்ரேயா நடித்த தெலுங்கு படமொன்றில் நானும் பணியாற்றியுள்ளேன்.
தென்னிந்திய பட உலகில் நடிகையாக சில படங்களில் நடித்துள்ள ஸ்ரேயாவை மட்டுமே நான் அறிவேன். அநியாயத்துக்கு இப்படி வதந்தியை கிளப்பி விடுவது வேடிக்கையாக உள்ளது. மலிவான வகையில் என் பெயர் விளம்பரமாவதால் குடும்பத்தில் உள்ளவர்கள் கொதித்து போய் என்னை கேள்வி கேட்கிறார்கள்.
இதற்கெல்லாம் பதில் கூற வேண்டியதாக உள்ளது. நான் படங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். வதந்திகள் மேல் ஆர்வம் காட்டமாட்டேன்.நான் நடித்த இந்தி,தெலுங்கு படங்கள் ரிலீசாக உள்ளன.
இந்நிலையில் இப்படியெல்லாம் என்னை சுற்றி வதந்தி வருவது பற்றி உறவினர்கள், நண்பர்கள் வருத்தமடைந்துள்ளார்கள் என்று கவலையோடு பேசியுள்ளாராம் ரானா.


