
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உலகக் கோப்பை இறுதிப் போட்டி மும்பையில் இன்று நடந்தது. இந்தப் போட்டியை பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுடன் பல்வேறு பிரபலங்களும் பார்த்தனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் செளந்தர்யாவுடன் வந்திருந்து போட்டியைப் பார்த்து ரசித்தார். அதேபோல ராகுல் காந்தி , பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமிர்கான் உள்ளிட்டோரும் பார்த்தனர்.
இந்தியா தனது முக்கிய விக்கெட்களான ஷேவாக், சச்சின் ஆகியோரை மோசமான முறையில் இழந்ததைப் பார்த்து ரஜினி படு இறுக்கமாக காணப்பட்டார்.
பாகிஸ்தானுடன் நடந்த அரை இறுதிப் போட்டியை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனது கணவர் நடிகர் தனுஷுடன் இணைந்து பார்த்தது குறிப்பிடத்தக்கது.


