தெலுங்கு, தமிழில் நடித்தாலும் இந்திப் படத்தில் நடிப்பதுதான் எனது கனவு, லட்சியம் என்று கூறி வந்தார் தாப்ஸீ.

ஆடுகளத்தில் அறிமுகமான இவர் தற்போது வந்தான் வென்றான் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.
தாப்ஸீயின் விருப்பத்துக்கேற்ப புரி ஜெகன்நாத் இயக்கும் இந்திப் படத்தில் அமிதாப்பச்சனுடன் நடிக்க தாப்ஸீக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அவர்கள் கேட்ட தேதியை அவர் ஏற்கனவே தெலுங்குப் படம் ஒன்றிற்கு தந்திருந்தார். அதனால் அமிதாப்புடன் நடிக்கயிருந்த அரிய வாய்ப்பு கை நழுவியது.
தற்போது டேவிட் தவானின் இயக்கத்தில் நடிக்க தாப்ஸீக்கு அழைப்பு வந்திருக்கிறது. வேறு படங்களில் நடிக்காமல் கால்ஷீட்டை காலியாக வைத்திருந்ததால் அழைத்த உடனேயே வாய்ப்பை ஒத்துக் கொண்டிருக்கிறார்.
இனி இவரை இந்தியில் மட்டும்தான் ரசிகர்கள் பார்க்க முடியும்.


