உச்சம் ஓட்டுப் போடப் போன போது பத்திரிகையாளர்கள் சூழ்ந்து நின்று அவர் ஓட்டுப் போடுவதை படமெடுத்தனர்.

யாருக்கு ஓட்டுப் போட்டார் என்பதை வெளிப்படையாகச் சொன்னால் தேர்தல் கமிஷன் உள்ளே தள்ளிவிடும் என்பதால் எந்த மீடியாவும் விஷயத்தை வெளியில் சொல்லவில்லை. ஆனால் தெரிய வேண்டிய பெருந்தலைகளுக்கு விஷயம் தெரிந்துவிட்டது. உச்சம் ஆளுகிறவர்களுக்கு ஆப்பு வைத்திருக்கிறார்.
தேர்தல் நடந்த அன்றே மூணு தமிழ் அறிஞருடன் படம் பார்க்க வேண்டிய கட்டாயம் உச்சத்துக்கு. ஆனால் அந்த சந்திப்பில் பழைய உற்சாகமில்லாததுடன், நேரடியாகவே உச்சத்தையும், அவரது சகபாடிகளான கருவாச்சி கவிஞர் உள்ளிட்டோரையும் வாரியிருக்கிறார் அறிஞர்.
அப்செட்டிலிருக்கிறார் உச்சம்.


