பிரபு தேவா, அவரது மனைவி ரம்லத் இருவரும் மனம் ஒத்து பிரிவதாக குடும்ப நல கோர்ட்டில் 3 மாதங்களுக்கு முன் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்.

வருகிற ஜூன் மாதம் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது இருவருக்கும் விவாகரத்து கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ரம்லத்துக்கு சொத்துக்கள் தர உறுதி அளித்தபடி அவர் பெயரில் அவற்றை மாற்றி எழுதி பத்திரப் பதிவு செய்து வருகிறார். முதல் கட்டமாக ரூ.5 லட்சத்தை ரம்லத்திடம் வழங்கியுள்ளார். மேலும் 5 லட்சம் ரூபாயை விவாகரத்து கிடைத்ததும் வழங்குவதாக கூறியுள்ளார்.
கிழக்கு கடற்கரையில் உள்ள 22 சென்ட் நிலத்தை ரம்லத், மற்றும் குழந்தைகள் பெயரில் மாற்றி எழுதியுள்ளார். அதில் தன்னை பங்குதாரராக சேர்த்து உள்ளார். அடுத்து அண்ணா நகரில் உள்ள வீட்டை ரம்லத் பெயரில் மாற்றி பத்திரப் பதிவு செய்ய ஏற்பாடு நடக்கிறது.
ஐதராபாத்தில் உள்ள வீடுகளை குழந்தைகள் பெயருக்கு மாற்றி எழுதுகிறார். இவற்றுக்கான பத்திரப் பதிவுகள் ஓரிரு வாரத்தில் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு சொத்துக்கள் மாற்றி எழுதப்பட்ட விவரங்கள் கோர்ட்டில் தெரிவிக்கப்படும். விவாகரத்து கிடைத்ததும் ஜூலை மாதம் நயன்தாரா, பிரவுதேவா திருமணம் நடைபெறும் என தெரிகிறது.


