கடாபிக்கு அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், அரபுலீக் நாடுகள் அவசரமான எச்சரிக்கை விடுத்தன. ஓர் அடிகூட முன் வைத்து முன்னேறக்கூடாது, உடனடியாக தாக்குதலை நிறுத்து என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தனது எச்சரிக்கையை விடுத்தார்.

அட்ஜாபியான், மிசுறாற்றா, அஸ்ஸாவியா ஆகிய நகரங்களை மறுபடியும் கைப்பற்றிய கடாபியின் படைகள் உடனடியாக அந்த இடத்தைவிட்டு பின்வாங்கிவிட வேண்டும் என்ற கடைசி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை மீறி நடந்தால் ஐ.நாவின் பிரேரணை மேலும் விஸ்தரிக்கப்பட்டு தரைவழி தாக்குதலும் நடாத்தலாம் என்ற இடத்திற்கு விஸ்தரிக்கப்பட்டு, சர்வதேச படைகள் களமிறக்கப்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐ.நாவால் விதிக்கப்பட்ட தடைகள் அத்தனையையும் கடாபி கருத்தில் கொண்டு உடனடியாக நடக்க வேண்டும். நிறுத்தப்பட்ட மின்சாரம், தண்ணீர், உணவுப் பொருட்களின் தடை யாவும் மறுபடியும் இயங்கு நிலைக்கு கொண்டுவரப்பட வேண்டும். அனைத்து நிபந்தனைகளையும் கடாபி பூரணமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பராக் ஒபாமா முதல் தடவையாக கடும் தொனியில் தெரிவித்தார். தமது நாட்டின் மீது இப்படியொரு தடை போடுவது ஏற்க முடியாத செயல் இது ஒரு காலனித்துவ அடக்குமுறை என்று அதற்கு கடாபி பதிலளித்துள்ளார். ஆனால் மேலே குறிக்கப்பட்ட நாடுகள் மட்டுமல்ல பெரும்பாலான உலக நாடுகள் கடாபியை கடுமையாக எச்சரித்துள்ளன. புதிய படையணிகளாக ஆபிரிக்க நாடுகளிள் சிலதின் படைகள் களமிறக்கப்படலாம் என்றும் தெரியவருகிறது.


