பெயர் :திருமதி காசிநாதர் சிவகாமசுந்தரி
பிறந்த இடம் :கல்வயல்
வாழ்ந்த இடம்: மட்டுவில்

பிறப்பு -
இறப்பு - 2011-01-26
பிறந்த இடம்: கல்வயல்
வாழ்ந்த இடம்: மட்டுவில்
கல்வயலைப் பிறப்பிடமாகவும் மட்டுவில் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி காசிநாதர் சிவகாமசுந்தரி நேற்று (26.01.2011) புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் திருநெல்வேலியில் சிவபதம் அடைந்துவிட்டார்.அன்னார் காலஞ்சென்ற மானாவளை கணபதிப்பிள்ளை முத்துப்பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட மகளும் காலஞ்சென்ற கந்தர் காசிநாதரின் (ஓய்வு பெற்ற அதிபர், மட்டுவில் சந்திரமௌலீஸ்வர தர்மகர்த்தாவும்) அன்பு மனைவியும் பாலசுப்பிரமணியம், சறோஜனிதேவி, காலஞ் சென்ற ஈஸ்வரிதேவி மற்றும் சிவபாலன் (தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவஸ்தானம்), சிவகடாட்சம் (கடாபி பிரசன்னா லொறி உரிமையாளர்), சிவஞானசுந்தரம் (முகாமையாளர் திருக்கணித பதிப்பகம், சாவகச்சேரி), கிருபாதேவி ஆகியோரின் அன்புத் தாயும் புஸ்பகாந்தி, தவராஜா, தவரத்தினம், மனோன்மணி, விமலினி, காலஞ்சென்ற சண்முகானந்தம் ஆகியோரின் அன்பு மாமியும் அரவிந்தன் வள்ளிநாயகி, அனுஷா ஜெகதீஸ்வரன், அமுதா யோககிரிநாதன், அஜந்தன் தயாளினி, உமாசத்தியேந்திரன் (தாதிய உத்தியோகத்தர், யாழ். போதனா வைத்தியசாலை), சுகிர்தா சர்வநாதன் (சுவிஸ்), சுதன் (சுவிஸ்), சுரேகா, அபிராமி சதீஸன், ஆரணி, தாரணி, மயூரதன், பிரசன்னா, பிரவீணாலம் போதரன் (சுவிஸ்), பிரதீபா யோகானந்தன் (லண்டன்), பிரபூர்ணா, பிரணவி, குமணன் நிரோஷினி (பிரான்ஸ்), ஸ்ரீரமணன் தர்சினி (சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (27.01.2011) வியா ழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் பலாலி வீதி, திருநெல் வேலி வடக்கில் அமைந்துள்ள உமாசத்தியேந்திரனின் தற்காலிக இல்லத்தில் சிவக்கிரியைகள் நடைபெற்று தகனக்கிரியைக்காக திருநெல்வேலி இந்து மயானத்துக்கு பூதவுடல் எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : கா.சிவபாலன் (மகன்)
தொடர்புகளுக்கு
கா.சிவபாலன் (மகன்) - 3 ஆம் கட்டை, பலாலி வீதி, திருநெல்வேலி வடக்கு. ,


