
பூவா தலையா வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49.4 ஓவர்களில் 225 ரன்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக டிராட் 67 ரன்களும், மோர்கன் 63 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர்.
அடுத்து களம் இறங்கிய வங்கதேச அணி 49 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக இம்ருல் கயேஸ் 60 ரன்கள் எடுத்தார். தொடக்க வீரர் தமிம் இக்பால் 38 ரன்கள் எடுத்தார்.
ஒரு கட்டத்தில் வங்கதேச அணி 169 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் 9-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய மக்முதுல்லா, ஷபியுல் இஸ்லாம் இணை 58 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.
ஷபியுல் இஸ்லாம் 24 ரன்களும், மக்முதுல்லா 21 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். 60 ரன் குவித்த இம்ருல் கயேஸ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


