
அடுத்த மாதம் பங்களாதேஷ் தொடருக்கு பொண்டிங் கேப்டன் பொறுப்பில் நீடிப்பது குறித்து கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது என்றும் இதனால் தலைமைப் பொறுப்பு விரைவில் மாறும் என்று தெரிகிறது.
ஆனால் அவர் தொடர்ந்து அணியில் விளையாடுவார் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஆஷஸ் தொடரை 3 முறை தோற்ற ஒரே அவுஸ்திரேலிய கேப்டன் என்ற எதிர்மறைப் பெருமையை பொண்டிங் பெற்றிருப்பதால் அவர் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
மேலும் முதல் போட்டியிலேயே ரன் அவுட் ஆன கோபத்தில் ஓய்வறை டி.வி.யை உடைத்து ஐ.சி.சி.யால் எச்சரிக்கை விடுக்கப்பட்டார்.
அன்று கேட்ச் ஒன்றை பிடிக்கும் போது இளம் வீரர் ஸ்மித் மேலே வந்து மோதியதால் ஆத்திரத்தில் பந்தை ஓங்கி தரையில் அடித்து கோபத்தை வெளிப்படுத்திய செயலும் அவர் கேப்டன் பொறுப்பிற்கான பொறுமை உடையவரல்ல என்று அங்கு பேச்சு எழுந்துள்ளது.
இதேபோல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்து பேட்டில் பட்டது தெரிந்தும் தானே வெளியேறாமல் நடுவரின் தீர்ப்புக்காக காத்திருந்தது ஒரு பெரிய தவறாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.
எனவே பொண்டிங்கின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என்று அந்தப் பத்திரிக்கைச் செய்தி கூறுகிறது.
உலகக் கிண்ண கிரிக்கெட் காலிறுதியில் நாளை இந்தியாவை அவுஸ்திரேலியா எதிர்கொள்கிறது.


