
முதல் ஓவரை ஹர்பஜன் சிங் வீச சேவாக் அவரை நேராக ஒரு சிக்ஸ் அடித்தார். முதல் ஓவரில் 10/0 என்று இருந்தது. டெல்லி.
அடுத்த ஓவர் மலிங்கா வீச வந்தார். அதிரடி மன்னன் வார்னரை காலைப் பதம் பார்க்கும் யார்க்கரை வீசி ஸ்டம்ப்களைப் பெயர்த்தார்.
அதே ஒவரில் மீண்டும் தன் முதல் போட்டியை விளையாடும் சந்த் என்பவருக்கும் காலைக் காலி செய்யும் யார்க்கரை வீசி வீழ்த்தினார்.
பிறகு சேவாகிற்கு ஒரு மைடன் ஓவரையும் வீசினார் மலிங்கா. ஆனால் இடையில் மலிங்காவின் யார்க்கர் அல்லாத பந்தை சேவாக் பவுண்டரி அடித்தார்.
அதன் பிறகு 19 ரன்கள் எடுத்த சேவாக், ஃபைன் லெக் திசையில் பின்ச் தட்டி விட ஒரு ரன் எடுக்க முயன்றபோது சச்சின் டெண்டுல்கரி நேரடி ஹிட்டிற்கு ரன் அவுட் ஆனார் சேவாக்.
7-வது ஓவரில் 40/4 என்று இருந்தபோது முனாஃப் படேலுக்கு ஒரு ஓவரை வேணுகோபால்ராவ் மைடனாக்கினார். 8- 40/4 என்று இருந்த டெல்லி அணி அதன் பிறகு வேணுகோபால் ராவ், நமன் ஓஜா ஜோடி மூலம் 15-வது ஓவரில் 82 ரன்களை எட்டியது. அப்போது 29 ரன்களை எடுத்த ஓஜா காலியானார்.
வேணுகோபால் ராவை மலிங்கா மீண்டும் ஒரு யார்க்கர்/ஃபுல்டாஸை வீழ்த்தி பவுல்டு செய்தார். ராவ் 26 ரன்களை எடுத்தார். அதே ஓவரில் மோர்னி மோர்கெலுக்கும் பாதங்களைப் பெயர்க்கும் யார்க்கரை வீசி பவுல்டு செய்தார். கடைசி 13 ரன்களுக்கு டெல்லி 6 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களை எடுத்தது.
மலிங்கா 3.4 ஓவர்களில் 15 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முர்டசா 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.


